சாக்கு முட்டையில் ஆண் சடலம்.. தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனை... கொலை செய்த பெண் தாமாக முன்வந்து சரண்..!

0 2215

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்குவாரியில் இளைஞர் சடலமாகக் கிடந்த நிலையில், தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

சங்கராபுரம் அருகேயுள்ள மணலூர் கிராமத்தில் கல்குவாரியில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் வந்தது.

போலிஸ் விசாரணையில் கொல்லப்பட்டவர் அதே ஊரைச் சேர்ந்த 22 வயதான தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதே ஊரைச் சேர்ந்த விஜயபிரியா என்ற பெண் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார்.

அவரிடம்  போலிசார் மெற்கொண்ட விசாரணையில் 29 வயதான விஜயபிரியாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் தங்கதுரையுடன் 3 ஆண்டுகளுக்கும் மேல் தகாத உறவு இருந்து வந்த நிலையில், கணவர் ஊருக்கு வருவதால் இந்த உறவை நிறுத்திக்கொள்ளலாம் என விஜயபிரியா தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த தங்கதுரை அவரை அறிவாளால் வெட்டச் சென்ற நிலையில் அருகிலிருந்த கத்தியை எடுத்து தங்கதுரையின் கழுத்தை அறுத்து கொன்றதாகவும் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உடலை சாக்குப்பையில் கட்டி வீட்டின் பின்புறம் உள்ள கல்குவாரியில் வீசியதாகவும் விஜயபிரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments