நீ ஒரு சைக்கோ... உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது இனி என்னை மறந்து விடு..! 8 வருட காதலுக்கு கெட் அவுட்..!

0 8725

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 8 வருட காதலை முறித்து பேசுவதை நிறுத்திய, காதலியின் வீட்டுக்கு சென்று சினிமா பாணியில் சவுண்டு விட்ட மெக்கானிக்கல் என்ஜீனியரை போலீசார் தட்டித்தூக்கினர். தானாக சென்று வீணாக ஜம்பம் அடித்து ஜெயிலில் கம்பி எண்ணும் காதல் போராளி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு..

8 வருடமாக நாயா..பேயா.. ஒன்னா.. மண்ணா...சுற்றி காதலித்து விட்டு, கடைசியில் கழட்டிவிட்டதாக கூறி காதலியின் வீட்டு முன்பு நின்று சவுண்டு விட்டு ஆப்பு வாங்கிய மெக்கானிக்கல் என்ஜீனியர் ஜெபின் இவர்தான்..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின் பிஇ மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்த நிலையில், பஹ்ரைனில் பொறியாளராக வேலைப்பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 25-வயது பெண்ணும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இரு சக்கர வாகனத்தில் ஷாப்பிங், டேட்டிங் என்று ஊர் ஊராக உல்லாசமாக சுற்றிய இவர்களது காதல் வாழ்க்கையில் ஜெபின் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த காதலி, ஜெபினுக்கு வீடியோகாலில் தரிசனம் கொடுத்து வந்த நிலையில், ஆண் நண்பர்கள் சவகாசம் குறித்து காதலியை ஜெபின் கண்டித்ததால், இவர்களது காதல் முறிந்ததாக கூறப்படுகின்றது

இதனால் நான்கு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஜெபின் காதலியின் வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார். காதலியின் பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்கவில்லை, இதற்கிடையே ஜெபினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது காதலி, நீ ஒரு சைக்கோ உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது... என்னை மறந்து விடு... எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே என கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற ஜெபின், புதன்கிழமை காதலியின் வீட்டிற்கு சென்று தனக்கு நியாயம் கேட்பதாக கூறி, பட்டப்பகலில் பகிரங்கமாக பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார்.

காதலியுடன் சேர்ந்து தான் செல்போனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி, அவரை வெளியே வருமாறு அழைத்து, வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று அடாவடியில் ஈடுபட்டார்.

என்னை சைக்கோ என்கிறாள்... அவங்க அப்பா தூங்கின பிறகு இரவு 11-மணிக்கு என்னை வீட்டிற்கு கூப்பிட்டா தெரியுமா ..? என்று புலம்பியபடி நின்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டபோது, காதலி தரப்பில் வந்த வழக்கறிஞர் ஒருவர், ஜெபின் மற்றும் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது

ஜெபின் வீட்டிற்குள் புகுந்து கேட்டை தட்டி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக காதலியின் தந்தை விஜயராஜ் அளித்த புகாரின் பேரில், ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் வெளியிடுவது, அத்துமீறி வீட்டில் நுழைவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, காதல் போராளி ஜெபினை கைது செய்த போலீசார், தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விட்டுப்போன காதலிக்காக, வெளிநாட்டில் பார்த்த வேலையை விட்டு, வீடுதேடிச்சென்று வாயால் ஜம்பம் அடித்த காதலன் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments