பாஜக ஆலோசனைகூட்டத்தில் உட்கட்சிபூசல் காரணமாக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு..!

0 3032

உட்கட்சி பூசல் காரணமாக, இராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனைக்கூட்டத்தின்போது நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்வதாக கூறி, இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து நிர்வாகிகளின் பொறுப்பையும் கலைத்த, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய நபர்களையும் நியமித்தார்.

பாஜக மாவட்ட செயலாளராக இருந்த கதிரவனை மாற்றி, தரணி முருகேசன் என்பவரை அந்த பொறுப்புக்கு நியமித்தார். இதனால் கட்சியினரிடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் புதிய மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் சிலர், நாற்காலிகளை தூக்கி தாக்க முயன்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பிரச்சனைக்குரிய நபர்களை கட்சியினரே வெளியேற்றினர்.
போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments