லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்... மீன்களை சாலையில் வீசி எறிந்து மீன் வியாபாரிகள் திடீர் மிரட்டல்

லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்... மீன்களை சாலையில் வீசி எறிந்து மீன் வியாபாரிகள் திடீர் மிரட்டல்
சென்னை மெரினா லூப் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்படிருந்த மீன்கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர்.
லூப் சாலையின் இரு பக்கமும் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் இக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த மீன் வியாபாரிகள், மீன்களை சாலையில் வீசி எறிந்து அதிகாரிகளை மிரட்டினர்
அவர்களின் மிரட்டலை கண்டு கொள்ளாமல் மேற்கு பக்கம் உள்ள கடைகளை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. கிழக்குபகுதியில் உள்ள கடைகள் அகற்றப்படவில்லை. அங்கு செயல்படும் கடல் உணவு ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
Comments