5 வயது பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... 65 வயது தனியார் பள்ளி தாளாளர் கைது..!

0 3288

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஐந்து வயது பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளித் தாளாளரான, திமுக கவுன்சிலர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில், விருதாச்சலம் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளி சென்று திரும்பிய சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு  சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி பாலியல் சீண்டலுக்குள்ளானதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், சிறுமியிடம் பெண் காவலர்கள் பெற்றோர் முன்னிலையில் விசாரித்ததில் பள்ளி தாளாளரான பக்கிரிசாமி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவர, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, 30-வது வார்டு நகர்மன்ற திமுக கவுன்சிலரான பக்கிரிசாமியை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரானோர் மனித குலத்திற்கே அவமானம் எனக் கூறினார்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் அவர் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments