5 ஆண்டுகளாக காதலித்து வந்த இளைஞர் ஆணவப் படுகொலை.. காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்
தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்காக இளைஞர் ஒருவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். நலகொண்டா மாவட்டம் ஜி.என்.ஆர்.எம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
5 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனை அழைத்து சமாதானம் பேச வரவழைத்து, அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நவீன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments