சீனாவைச் சேர்ந்த பெண்ணை சமூகவலைதள செயலி மூலம் காதலித்து கரம்பிடித்த கடலூர் இளைஞர்..!

0 3770

கடலூரைச் சேர்ந்த இளைஞர், சீனாவைச் சேர்ந்த பெண்ணை சமூகவலைதள செயலி மூலம் காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர், சீனா மற்றும் பாங்காக்கில் தொழில்முனைவராக இருப்பதாகவும், வி சேட் ஆப் மூலம் யீஜியோ என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது. அதே மேடையில், பாலச்சந்தரின் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில், அவரது சகோதரரின் திருமணமும் நடைபெற்ற நிலையில், முன்தினம் நடைபெற்ற வரவேற்பில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments