தைவானை சுற்றி வளைக்க சீன ராணுவம் போர் ஒத்திகை..!

தைவானின் வெளி உலகத் தொடர்புகளை முற்றிலுமாக துண்டிக்கும் வகையில் போர் ஒத்திகை மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா உரிமை கோரிவருகிறது.
கடந்த வாரம், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, 3 நாட்களாக தைவானை சுற்றிவளைக்கவும், இலக்குகளை குறிவைத்து வான் தாக்குதல் நிகழ்த்தவும் போர் ஒத்திகை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், "மிலியஸ்" என்ற ஏவுகணை அழிப்பு கப்பலை தைவானுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது சீனாவை மேலும் கோபமடையச்செய்துள்ளது.
Comments