"பிரதமர் மோடி எடப்பாடியை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பார்.." - செங்கோட்டையன்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதது குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகம் வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும் பிரதமர் மோடி எடப்பாடியை எங்கே சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பார் என்றும் கூறினார்.
Comments