'கேஷ் ஆப்' செயலியை உருவாக்கிய பாப் லீ படுகொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

0 1415

மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான கேஷ் ஆப் (Cash App) என்ற பணப்பரிவர்த்தனை செயலியை உருவாக்கிய பாப் லீ, அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மொபைல் காயின் (MobileCoin) என்ற கிரிப்டோகரன்சி (cryptocurrency) நிறுவனத்தில் உயர் பொறுப்பு வகித்துவரும் பாப்லீ இதற்கு முன் கூகுள், கேப்ஜெமினி போன்ற முன்னனி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மாநாடு ஒன்றில் பங்கேற்க ஃப்ளோரிடாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற பாப் லீ, நண்பர்களை சந்திப்பதற்காக அங்கேயே தங்கியுள்ளார்.

நள்ளிரவு 2 மணியளவில், ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரது மார்பில் 2 முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

சட்டையை உயர்த்தி, கத்தி குத்து காயங்களை காட்டியபடி அவ்வழியாக காரில் சென்றவர்களிடம் உதவி கோரியபோதும் யாரும் உதவ முன்வராத நிலையில், இறுதியாக அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப் லீ உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments