பத்மபூஷன் விருது.. தனது தாய் வாங்குவதை பார்ப்பதற்கு குடும்பத்தினருடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமரின் மனைவி..!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினை தாயார் சுதாமூர்த்தி பெறுவதை பார்ப்பதற்காக, இங்கிலாந்து பிரதமரின் மனைவி தனது குடும்பத்தினருடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டெல்லியில், புதன்கிழமை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதாமூர்த்தி சிறந்த சமூக சேவைக்கான பத்மபூஷன் விருதை குடியரசுத்தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த, சுதாவின் மகளும், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி தனது குடும்பத்தினருடன் சாதாரணமாக நடுவரிசையில் அமர்ந்திருந்தார்.
பின்னர், அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் வகையில் முன்வரிசையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்.
Comments