ஆஸ்காரா கொடுக்குறாங்கோ..? கெரசின் பாத் படுத்து உருண்டு அட்ராசிட்டி.. கூலாக கையாண்ட போலீசார்..!

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்னை ஊற்றிக் கொண்டு 7 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நடத்திய தீக்குளிப்பு நாடகத்தால் சிறிது நேரம் பரபரப்பு..
சேலம் கிச்சிபாளையத்தில் ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அவரது குடும்பதை சேர்ந்த 7 பெண்கள் 3 கைகுழந்தைகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தங்கள் மகனை போலீசார் பிடித்துச் சென்று அடிப்பதாக கூச்சலிட்டபடியே தீக்குளிக்க போவதாக கூறினர்
சத்தம் கேட்டு வந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
எழுந்திருக்க மறுத்து ஒருவரை ஒருவர் இருகப் பிடித்துக்கொண்டு சாலையில் அமர்ந்து அட்ராசிட்டி செய்தனர்.
பெண் போலீசார் ஒவ்வொரு பெண்ணாக குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது ஓடிச்சென்ற ஒரு பெண்மணி மோதியதால், அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆட்டோவில் ஏற்றப்பட்ட அனைவரும் நல்லவேளை போலீசார் காப்பாத்திட்டாங்க.. என்ற மன நிலையில் அமர்ந்திருந்தனர்.
இன்று மட்டுமல்ல கடந்த வாரம் கோழி பாஸ்கர் குடும்பத்தினர் இதே போல மண்ணெண்னை குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
சேலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வரும் நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பவைப்பதற்காக அவர்களது குடும்பத்தினர் இது போன்று மண்ணெண்னை குளியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments