மழை பெய்ததால் சாலையில் ஈரப்பதம்.. டூவீலர்கள் அடுத்தடுத்து சறுக்கி விழும் சிசிடிவி காட்சி..!
கேரள மாநிலத்தில் கிராம சாலையில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சறுக்கியவாறேச் சென்று விபத்தில் சிக்கிய காட்சிகள் முன்னாள் சென்ற பேருந்தின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள, பாலுசேரி என்ற நகர பகுதியை இணைக்கும் வகையில் கக்கோடி கிராமத்திலுள்ள சாலை புதிதாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியில் பெய்த மழையால், ஈரமாக இருந்த சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் ஒவ்வொன்றாக சறுக்கி விழும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில், கீழே விழுந்த ஒருவர் உடனடியாக எழுந்ததோடு, மற்றொரு டூவீலிருந்து விழுந்தவரை காப்பாற்றுவதற்காக ஓடும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.
Comments