மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூரில் இருவர் போலி மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் அரசு மருத்துவனை உதவி மருத்துவருக்கு கிடைத்த தகவலின் பேரில், மருத்துவக் குழுவினர் போலீசாருடன் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, கச்சேரி வீதியில் பி.கே சாமி என்ற பெயரில் கிளினிக்கை நடத்தி வந்த மணிகண்டன், பி.ஏ படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதே போல, சர்க்கரைசெட்டிபட்டி கிராமத்தில் பி.எஸ்.சி படித்து விட்டு மெடிக்கல் நடத்திக் கொண்டே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த வாசுதேவன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments