இன்ஸ்டாகிராமில் காதல் காமுகனிடம் சீரழிந்த சிறுமி.. பெற்றோர்களே உஷார்....! இந்த வயதில் ஸ்மார்ட் போன் தேவையா..?

0 5782
இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பள்ளிச்செல்லும் சிறுமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

முகத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் தான் இரு மாநில போலீசாரால் தேடப்படும் இரணியலைச் சேர்ந்த வைகுண்டஅருள்..!

ஸ்டைலான செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக்கிய பொறியாளரான வைகுண்ட அருளுக்கு, இன்ஸ்டாகிராமில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்திய அருள், இரணியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகின்றது. இதனால் கர்ப்பமான சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார்.

மாணவியை விட்டுச்சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கர்ப்பிணியான மாணவியை கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற வைகுண்ட அருள், அங்கு வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளான்.

நாட்கள் செல்லச் செல்ல தனது சுயரூபத்தை காட்டிய வைகுண்ட அருள் வரதட்சனை கேட்டு சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. அப்பாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். நியாயம் கேட்க சென்ற சிறுமியின் தந்தையையும் வைகுண்ட அருள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். திருமணமானதாக கூறப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரித்த போது அவர் 18 வயது நிரம்பாத சிறுமி என்பதை அறிந்த போலீசார் அவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்தது தமிழக பகுதி என்பதால், தமிழக டிஜிபிக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், வைகுண்ட அருள் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை கடத்தி வந்து தாக்கியதாக கேரள போலீசார் அருள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால், தாயையும் சேயையும் போலீசார் அங்குள்ள காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான வைகுண்ட அருளை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

படிக்கின்ற காலத்தில் தேவையில்லாத பொருட்களில் ஒன்றான ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்து காதலில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments