அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகளை தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி.!

0 1634

அமெரிக்காவின் நாஷ்வில் நகரில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

கடந்த மார்ச் 27ம் தேதி நாஷ்வில்லில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 28 வயதான பள்ளியின் முன்னாள் மாணவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் பள்ளிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், டென்னசி தலைமையகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments