பக்தர்கள் 36 பேர் பலியான இந்தூர் கோயில் இடித்து அகற்றம்..!

0 1885

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்  படிக்கிணறு மேல் இருந்த தடுப்பு இடிந்து விழுந்து 36 பேர் பலியான சம்பவம் நடைபெற்ற கோயில், புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

இந்தூரில் உள்ள Beleshwar Mahadev Jhulelal கோயிலில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி வழிபாடு நடத்த ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது கோயிலில் உள்ள படிக்கிணறு மேல் அமைக்கப்பட்டிருந்த  சிமெண்ட் சிலாப் தடுப்பு இடிந்து விழவே, அதன்மேல் நின்றோரும் உள்ளே விழுந்தனர்.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, ஏற்கெனவே இருந்த பழைய கோயிலும், புதிதாக கட்டப்பட்ட கோயிலும் இடித்து அகற்றப்பட்டு, அங்கிருந்த  சுவாமி சிலைகள், வேறொரு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் படிக்கிணறும் மணல், செங்கல்கள் மூலம்  நிரப்பி மூடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments