'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என கூறவில்லை' - அண்ணாமலை விளக்கம்..!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தான் கூறியதே இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு முடிவான பிறகே கூட்டணி உறுதியாகும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்னாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டபின் பேட்டியளித்த அவர், அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் இல்லை, தண்ணீரில் எழுதப்படும் வாக்கியங்கள் தான் அதிகம் என்றும் தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது என்றும் கூறினார்.
தென்காசி, ராமநாதபுரம், கொங்கு மண்டல பகுதிகளில் பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 25 எம்.பி தொகுதிகளில் வெற்றிபெறும் அளவிற்கு பாஜகவை வலுப்படுத்துவதே தங்கள் இலக்கு என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்
Comments