பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என தகவல்..!

0 1282

சென்னை பெருநகரில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய இ-டிக்கெட் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, இதனை செயல்படுத்தும் பணிகள் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் நடைபெற்று வருகிறது.

ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனியாக செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்தச் செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, எந்தெந்த போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறோம் என்பதை தேர்வு செய்து அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல்முறையாக இந்த வசதி CUMTA மூலம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான டெண்டர் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான பணிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments