ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மருந்துகள்..!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் மருந்து மாத்திரைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சுதாகரிடம் மருந்து எடுத்துவர வாகனம் கேட்கும் போதெல்லாம் தர மறுப்பதால், நகராட்சி ஆணையாளர் வினோத்திடம் அவ்வப்போது வாகனத்தை கேட்டு பெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று ஜீப் பழுதாகி இருந்ததால் வேறு வழியில்லாமல் குப்பை அள்ளும் வண்டியை கழுவி சுத்தம் செய்து கொடுத்ததாக மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத் விளக்கம் அளித்துள்ளார்.
அவசரம் கருதி குப்பை அள்ளும் வாகனத்தை கொடுத்ததாகவும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments