பிஎம்-ஸ்ரீ திட்டத்துக்காக 9,000 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாரிப்பு..!

0 1200

பிஎம்-ஸ்ரீ திட்டத்தின்கீழ் மாதிரி பள்ளிகளை உருவாக்க நாடு முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் பிஎம்-ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் தவிர்த்து, பிற மாநிலங்கள் இதை செயல்படுத்த ஒப்புக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட 6 அளவீடுகள் அடிப்படையில், 9 ஆயிரம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்டவற்றுடன் தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்படுமென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments