தந்தையின் பராமரிப்புக்கு பணம் அளிக்காத 2 மகன்கள் கைது..!

0 4157

நெல்லை அருகே பராமரிப்பு செலவுக்கு தந்தைக்கு பணம் வழங்காத 2 மகன்கள், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்த முதியவரான சுந்தரம்,தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது .ஆதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

இதை விசாரித்த ஆட்சியர்,  மாதந்தோறும் சுந்தரம் வங்கி கணக்கில் மகன்கள் 4 பேரும் தலா 2,500 ரூபாய் செலுத்த உத்தரவிட்டிருந்தார். இதன்படி முத்துகிருஷ்ணன் மற்றும் முத்து மணிகண்டன்  பணமளித்த நிலையில், செண்பகநாதன், செந்தில் முருகன் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆட்சியரிடம் சுந்தரம் முறையிடவே, மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ்  2 பேரையும் கைது செய்ய போலீசாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments