புதுச்சேரியில் புதிய கட்டடங்களில் சூரியஒளி மின் அமைப்பு கட்டாயம் - மின்துறை அமைச்சர் அறிவிப்பு

0 1005
புதுச்சேரியில் புதிய கட்டடங்களில் சூரியஒளி மின் அமைப்பு கட்டாயம் - மின்துறை அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதை ஊக்குவிப்போம் என்றும் தெரிவித்தார்.

ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

ராகுல்காந்தி பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக பேசியவை அவைகுறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments