டி -20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி புதிய சாதனை..!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18புள்ளி 5 ஓவரில் 258 ரன்கள் என்ற இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் ரன்களை குவித்தனர். இதனால் 18புள்ளி 5 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா 259 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Comments