போஜ்புரி பட நடிகை ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை? இன்ஸ்டாவில் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நிலையில் விபரீதம்

0 4413

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே, ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா பைஸ்லா' படத்தின் மூலம் அறிமுகமான ஆகான்ஷா, அதன்பின் போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் நடித்துள்ளார்.

அகான்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு, கண்ணீர் சிந்தியபடி செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments