ரஷ்ய ராணுவத்திற்கு ஆள் சேர்க்க கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிப்பு..!

0 4419

உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா, ராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

கடந்த முறை, 3 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டே வெளியேறினர். ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், மீண்டும் ஆள் சேர்க்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

ராணுவத்தில் சேர்வோரின் வாரிசுகளுக்கு பல்கலைக்கழகங்களில் முன்னுரிமை, உயிரிழக்கும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை அதிகரிப்பு போன்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டுவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments