கொச்சி விமான நிலையத்தில் கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

0 1359

இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்ட நிலையில், சுமார் 25 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியபோது திடீரென கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியபோது, விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த விமானிகள் உட்பட 3 பேர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து காரணமாக கொச்சி விமானநிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments