உலக தூக்க தினம் - தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்..!

உலக தூக்க தினத்தையொட்டி, தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபயணத்தை தமிழ்நாடு காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஏடிஜிபி சங்கர், பல்வேறு நோய்கள் வர தூக்கமின்மை ஒரு காரணம், நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் அவசியம் என்பதை எடுத்துக்காட்ட தான் இந்த நடைபயணம் என்றார்.
Comments