காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... கிடுக்கிப்பிடி விசாரணையில் நண்பர்கள் கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்..!

0 3798

கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவரை, முன்விரோதம் காரணமாக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூத்தக்குடி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வியின் மகன் ஜெகன் ஸ்ரீ, தனியார் கல்லூரியில் DME மூன்றாமாண்டு படித்து வந்தார்.

உடல்நலம் சரியில்லாததால், சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாத ஜெகன் ஸ்ரீ, கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெகன்ஸ்ரீயை தேடி வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கார்த்திகை தீபத்தன்று தீ பந்தம் சுற்றும் போது தகராறு ஏற்பட்டதால், அந்த முன்விரோதத்தில் மது போதையில் ஜெகனை அடித்துக் கொலை செய்து, சடலத்தை கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் படி, நள்ளிரவில் ஜெகனின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், நண்பர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments