சென்னையில் பரபரப்பு... விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்ற வழக்கறிஞர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை..!

சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த ஜெய்கணேஷ்,நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு இரவு 9 மணியளவில் சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர், வழக்கறிஞர் ஜெய்கணேஷை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் காயமடைந்தார்.
ராயபேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராயப்பேட்டையில் கூடிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Comments