உயிரே காதலிக்கு தான்... அரசுப்பேருந்தை மறித்த மாமாக்குட்டிக்கு தர்ம அடி..! மனைவி கொடுத்த புகாரில் சம்பவம்

0 3038

மனைவியை விட்டு காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த இளைஞர் ஒருவர், காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி சாலையில் சென்ற அரசு பேருந்தை மறித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறிபிடித்து ஓடிய இளைஞரை உறவினர்கள் மடக்கிப்பிடித்து தலையில் தட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

மாப்பிள்ளை காளை போல ஓடும் இவர், தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசுல்..!

ரசூலுக்கும் மனைவி ஹாய்ஸ்ஷா பானுக்கும் திருமணமாகி எட்டு வருடங்களாகின்றது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் ரசூல் திருமணம் கடந்த உறவில் இருந்ததாக கூறப்படுகின்றது. பல முறை எச்சரித்தும், கெஞ்சியும் அடங்காத கணவன் ரசூல் மீது மனைவி ஹாய்ஸ்ஷாபானு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரசூலை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போலீசார், அந்த ரகசிய காதலியுடனான தொடர்பை துண்டிக்க கூறியுள்ளனர். இதனால் ஆவேசமான ரசூல், நான் காதலியுடன் தான் வாழ்வேன், அவள் இல்லையென்றால் செத்து விடுவேன் என்று சொல்லிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து தப்பி சாலையில் இறங்கி ஓடினார்

சாலைகளில் சென்ற கார் முன்பு போய் நிற்க அந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார். அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளின் முன்பு நின்று தன் மீது பேருந்தை ஏற்றக் கூறி ராவடி செய்தார் ரசூல்

அதிர்ஷடவசமாக அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தினர். ரசல் உறவினர்கள் ஸ்கூட்டர் மற்றும் கார் மூலம் அவரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். சாலையில் நின்று வம்பு செய்தவரை தர்ம அடி கொடுத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பெண் போலீசார் ரசூலை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்குள் அழைத்துச்சென்றனர்.

அடித்து இழுத்துச்செல்லும் போது, மாமா குட்டி ரசூலின் ரகளையை படம்பிடித்துக் கொண்டு இருந்த செய்தியாளர் ஒருவரை ரசல் உறவினர்கள் வீடியோ எடுக்க கூடாது என்று தகாத வார்த்தைகளால் திட்டி, அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிச்சென்றனர்.

மனைவியை பிரிந்து காதலி மீது மோகம் கொண்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்ளபோவதாக செய்த அடாவடியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments