சென்னை மாநகராட்சி பூங்காவை ஒட்டிய குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

சென்னை அம்பத்தூர் மதனகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஒட்டிய குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் ஹரிகுமார் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால், பூங்காவில் பராமரிப்பு இல்லாத குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.
நீச்சல் தெரியாததால் 18 அடி ஆழமுள்ள குளத்து நீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது. சிறுவனை காணாததால் அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடுதலில் ஈடுபட்டு மாணவனை சடலமாக மீட்டனர்.
குளத்தில் மூழ்கி இதுவரையில் 4 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், குளத்தை முறையாக பாரமரிக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Comments