17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments