குறைந்த விலையில் பங்களா... ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட தில்லாலங்கடி பெண்கள் கைது..!

0 2179

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மற்றும் நகைபறித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும்  சந்திரன் என்பவரை பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த  கலாராணி,சுமதி ஆகிய பெண்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரட்டுபாளையத்தில் குறைந்த விலையில் சொகுசு பங்களா விற்பனைக்கு இருப்பதாக கூறி அழைத்துள்ளனர்.

இதனை நம்பி வந்த சந்திரனை பங்களாவுக்குள் அடைத்து வைத்து அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மிரட்டிச் சென்றுள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து கலாராணி,சுமதி, மற்றும் சுபாஷ் ,கார்த்தி ,சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments