டீ பொடிக்கு பதில் போதை பவுடர்.. மணிப்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்படும் ரூ. 9 கோடி மதிப்புள்ள மெட்டாபெத்தமைன்..!

மணிப்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்யப்படவிருந்த 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மெட்டாபெத்தமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் போதைப் பொருள் கைமாறவிருப்பதாக கடந்த 14ஆம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீசார், போதைப்பொருளை வாங்க வந்த சௌபர் சாதிக், வாசிம் ராஜா ஆகியோரை மடக்கினர்.
அவர்களை துருப்புச்சீட்டுகளாகக் கொண்டு, முதற்கட்டமாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணிப்பூரில் நக்சலைட்டுகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் இருந்து, குறைந்த விலைக்கு மெட்டாபெத்தமைன் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து, சங்கேத வார்த்தைகளை சொன்னால் மட்டுமே போதைப் பொருள் கிடைக்கும்படி இந்த நெட்வொர்க் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Comments