யாருடைய ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றது.? திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம்..!

சட்டப்பேரவையில், யாருடைய ஆட்சியில் கல்வி வளர்ச்சி மேம்பட்டது என்பது குறித்து திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது.
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, தங்களது 30 ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வி வளர்ச்சி பெற்றதென தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தங்களது ஆட்சியில் தான் உயர்கல்வி வளர்ச்சி பெற்றதென திமுக அமைச்சர்களும் பேசினர்.
ஒருகட்டத்தில் உரையை முடிக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில், உணர்வோடு பிரச்சினைகளை பேசும்போது பேச்சை தடுக்காதீர்கள் என கே.பி.முனுசாமி கூறினார்.
Comments