''வசதியானவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டிய அவசியமில்லை..'' - அமைச்சர் எ.வ.வேலு..!

ரேசன் அட்டை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக வசதி படைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை வழங்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அதிகம் மது குடிக்கும் ஆண்கள் உள்ள வீட்டின் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையை வழங்குமாறு கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எ.வ.வேலு, ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழியை மேற்கோள்காட்டி, தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றார்.
Comments