சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த 3 சிறுமிகளுக்கு சூப்பர்வைசர் பாலியல் தொல்லை..!

சென்னை மாத்தூரில் உள்ள உதயம் சூப்பர்மார்க்கெட்டில் பணிபுரிந்த 17 வயதான சிறுமிகள் 3 பேருக்கு சூப்பர்வைசர் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சூப்பர்வைசர் மற்றும் சூப்பர்மார்க்கெட்டின் உரிமையாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவந்த சிறுமிகள் 3 பேருக்கு 62 வயதான சூப்பர்வைசர் சந்திரசேகரன் பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.
இதனால் அவரை பழிவாங்க சிறுமிகள் தேனீரில் பேதி மாத்திரை கலந்து அவருக்கு கொடுத்ததாக தெரிகிறது.
இது சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் செந்தில்குமாருக்கு தெரியவந்ததால் அவர் சிறுமிகள் 3 பேரையும் அடித்து வேலையை விட்டு அனுப்பியுள்ளார்.
இதனால் சிறுமிகள் ஒன்றாக பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சூப்பர்வைசர் சந்திரசேகரன், உரிமையாளர் செந்தில்குமாரை எண்ணூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்
Comments