அதானி குழுமத்தை அடுத்து, ஜாக் டோர்சியின் நிறுவனம் மீது ஹின்டன்பர்க் புகார்..!

0 3643

அதானி குழுமத்தை தொடர்ந்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சியின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, பிளாக் என்னும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாகயும், போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் ஜாக் மீது அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதனை தொடர்ந்து ஜாக் டோர்சியின் பிளாக் நிறுவனப் பங்குகள் 22 சதவீதம் வரை சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments