அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் அசாம் மாநில சிறைக்கு மாற்றம்..!

0 1258

பஞ்சாபில் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, அம்ரித் பாலின் கூட்டாளிகள் பலத்த பாதுகாப்புடன் அஸ்ஸாமில் உள்ள திப்ரூகர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நூற்றுக்கணக்கான அம்ரித்பால் ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்தில் உருவிய வாள்களுடன் புகுந்து, கடத்தல் வழக்கில் கைதாகி லாக்கப்பில் இருந்த ஒருவரை விடுவித்த சம்பவம் போல மீண்டும் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் பஞ்சாப் சிறையில் பாதுகாப்பு இருக்காது என்று காலிஸ்தான் ஆதரவு கைதிகள் அஸ்ஸாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments