''மார்ச் 24, 25 ஆம் தேதிகளில் சென்னையில் ஜி20 நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்..'' - ஆனந்தா நாகேஸ்வர்..!

ஜி20 மாநாட்டின் நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறுகிறது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்தா நாகேஸ்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தாநாகேஸ்வர், காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, எரிபொருள் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, விலை வாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கூட்டத்தில், ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 80 பேர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments