நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீடு.. அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி..!

0 2623

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடும்பத்தினர் பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு படுத்துத் தூங்கிய நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரை அப்பகுதியினர் மீட்ட நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments