"சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை" - அண்ணாமலை

சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை கூட ஏற்றுக்கொள்வதற்கு, முதலமைச்சருக்கு பக்குவமில்லை என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், அரவக்குறிச்சி தேர்தலில் தான் 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறினால், அமைச்சர் செந்தில் பாலாஜி அதனை ஆதாரத்துடன் வெளியிட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், உட்கட்சி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசுவது சரியல்ல என்று கூறிய அண்ணாமலை, நேரமும் காலமும் வரும்போது கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பதை தெரிவிப்பேன் என்றார்.
Comments