போதை பொருள் வைத்து இருந்ததாக இருவர் மீது பொய் வழக்கு.. உதவி ஆய்வாளர் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு..!

நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த போது போதை பொருள் வைத்து இருந்ததாக இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த சென்னை திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான நடவடிடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூரில் போதைப் பொருள் வைத்திருந்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி சூர்யா, சதீஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் 2 மணி நேரத்தில் திருவொற்றியூர் வருவது சாத்தியமில்லை என கூறி,பொய் வழக்கு பதிவு செய்த சென்னை திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
Comments