வெந்நீர் தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால்
உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
குன்னூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் வீட்டிற்கு பாலக்காட்டில் இருந்து வந்திருந்த சிறுமி சரண்யா வெந்நீர் இருந்த தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள உறவினர்கள் மேல்சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கேட்டும் தராத நிலையில், குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
Comments