சொத்து குவிப்பு வழக்கு- அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை.. கூட்டாக வாங்கிய ரூ.5 கோடி மதிப்பு நில ஆவணம் பறிமுதல்

0 9985

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் வீட்டிலிருந்து கூட்டாக வாங்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய  நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணியாற்றி வருபவர் ஆர்த்தி, இவரது கணவர் ஆனந்தமூர்த்தி  தருமபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக  பணியாற்றியபோது  1 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கிய புகாரின்பேரில் கடந்தாண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த நிலையில்,தருமபுரியில் உள்ள ஆனந்தமூர்த்தியின் வீடு, வேலூரில் ஆர்த்தி வசித்து வரும் அரசினர் பங்களா மற்றும் திருச்சியில் ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனையை தொடங்கினர் .

இதில் சுமார் 60 சவரன் நகைகள் தருமபுரியில் கூட்டாக வாங்கப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகைகள் பழையவை என்பதால் ஆர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments