இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை..!

0 1608

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மைதானம் அருகே நின்ற வாகனங்கள், கால்வாய் தொட்டிகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது.

இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், வீரர்கள் தெரிகிறார்களா என சுற்றுச்சுவர் வழியே ரசிகர்கள் எட்டிபார்க்க கூடினர். மேலும், மைதானம் அருகே கிரிக்கெட் ஜெர்சி, இந்திய தேசியக் கொடிகள் விறுவிறுப்பாக விற்பனையானது.

போட்டியை முன்னிட்டு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலையில் நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments