ஏப்.8-ஆம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

294 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும், தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
முன்னதாக வரும் 27ஆம் தேதியன்று தமிழகத்திற்கு பிரதமர் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 8ஆம் தேதியன்று வருகை தரவுள்ளதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments