மதுரையில் 2 பேரை கடத்தி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது..!

0 1090

மதுரையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி திருப்பி கொடுக்காத நண்பரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சகாதீன் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரான ஆதிக்கிடம் வாங்கிய பணத்தை தராமல், 2 மாதங்களுக்கு முன் ஆதிக்கிற்கு அவசர தேவைக்காக கொடுத்த இருபதாயிரம் ரூபாயை உடனே கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சகாதீன் சாகுல்ஹமீது என்பவருடன் பைக்கில் சென்றபோது இருவரையும் ஆதிக்கின் நண்பர்கள் அரிவாளை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்று அடைத்து வைத்தாக கூறப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் பணம், செல்போனை பறித்து, சகாதீன் மனைவியிடம் பணம் கேட்டதையடுத்து அவர் ஒரு லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு பேரும் படுகாயத்துடன் விடுவிக்கப்பட்ட நிலையில், சதாதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதிக் மற்றும் அவரது நண்பர்கள் அப்துல் இம்ரான், அஜிஸ் ஆசிக், முகம்மது அனாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments