கனவுகளை விட்டு விடாதீர்கள்; கெட்டியாக பிடித்து வைத்து கொள்ளுங்கள் - இளைஞரணி நிர்வாகிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை

0 1162

கனவுகளை விட்டு விடாதீர்கள் என்றும் கெட்டியாக பிடித்து வைத்து கொள்ளுங்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பாஜக இளைஞர் அணி சார்பில் மாதிரி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உங்களுடைய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஆசை வைத்து அதற்காக உழைக்க வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments